யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்!

 


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி பால்பண்ணை அருகாமையில் அமைந்துள்ள முகாமைத்துவ பீடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் செவ்வாய்க்கிழமை (16) மதியம் முன்னெடுக்கப்பட்டது.


யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியம் இணைந்து  குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


இதன் பொழுது முள்ளிவாய்க்கால் திட்டமிடப்பட்ட  இனப்படுகொலையில் உயிர்நீத்த உறவுகளிற்கான அஞ்சலி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் மூன்று மொழிகளிலான  துண்டுபிரசுரமும்  விநியோகிக்கப்பட்டது.


இதன்பொழுது அதிகளவான சிங்கள மாணவர்களும் நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.