4 வயது சிறுமி பரிதாப மரணம்.!

 


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் லான்மாஸ்டரின் சில்லுக்குள் அகப்பட்டு 4 வயது சிறுமி பரிதாப மரணம்.!


முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த துயர சம்பவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.


பாடசாலை முடித்து வந்த றிவ்விகா என்ற 4 வயது சிறுமி அயல் வீட்டுக்காரர் செலுத்திய லான்மாஸ்டர் சில்லுக்குள் அகப்பட்டு இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் குறித்து தெரியவருகையில்.


புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் வசிக்கும் குறித்த சிறுமி பாடசாலை முடித்து மதியம் வீடு வந்த போது அயல் வீட்டுகாரர் தனது விறகுடன் நின்ற லாம்மாஸ்ட்டரை பின்னோக்கி எடுக்க முற்பட்டுள்ளார்.


இதனை கண்ட சிறுமி ஓடிவந்து லான்மாஸ்டரின் பின்பக்கம் நின்றுள்ளார். சிறுமி நின்றது அறியாமல் குறித்த நபர் லான்மாஸ்ட்டரை பின்னோக்கி எடுத்துள்ளார்.


இதன்போது லான்மாஸ்ட்டரின் சில்லுக்குள் அகப்பட்டு சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


இச் சம்பவமானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


குறித்த லான்மாஸ்டரின் உரிமையாளரான குடும்பஸ்தர் புதுக்குடியிருப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சிறுமியின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.