விபத்தில் தம்பதி மரணம்!!

 


இரத்தினபுரி, திருவனகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் தம்பதியினர் ஸ்தலத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்றையதினம் இந்த விபத்து இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதிகள் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹவத்த ஓபாதவை சேர்ந்த 24 வயதுடைய எஸ்.மோகன் ராஜ் மற்றும் புஷ்பிகா ஹர்ஷனி தம்பதியே உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகிறது.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக இரத்தினபுரி மரண விசாரணை அதிகாரி டி.எம்.ஹரீந்திர லக்மின தென்னகோன் தெரிவித்தார்.

நேற்றையதினம்(12)  காலை  ஏழு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுது. மோட்டார் சைக்கிள் தனியார் பேருந்தை முந்திச் செல்லச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

 இந்நிலையில் திருமணமாக  இருமாதங்களில்  இளம் தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.