யாழ்ப்பாணத்தில் 85 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!!

 


யாழ்ப்பாணம், மண்டைதீவு தெற்கு கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 85 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.


வடக்கு கடற்படை கட்டளையில் SLNS வெலுசுமனவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, யாழ்ப்பாணம் மண்டைதீவு தீவின் தெற்கு கடற்கரை பகுதிக்கு அருகில் உள்ள புதர் செடிகளில் இருந்து 03 மூட்டை கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.


அந்த சாக்குகளில் சுமார் 85 கிலோ 450 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா அடைக்கப்பட்ட 22 பொதிகள் இருந்ததாகவும், அவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாகவும் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், இந்த தேடுதல் நடவடிக்கையில் பிடிபட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு 28 மில்லியன் ரூபாவாகும்.


மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை போதைப் பொருள் சரக்கு கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.