இலங்கை வானொலி சேவைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!!


இலங்கையின் வானொலி சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

இதன்படி, FM அலைவரிசை இல்லாது செய்யப்பட்டு, VHF அலைவரிசை ஊடாக வானொலி சேவை ஒலிபரப்பப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் ஹேலசிறி ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உலகிலுள்ள பல நாடுகளில் FM அலைவரிசைகளின் பயன்பாடு குறைவடைகின்ற நிலையிலேயே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தாமரை கோபுரத்தின் ஊடாக வானொலி சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி, கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு முதற்கட்டமாக வானொலி டிஜிட்டல் சேவையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹேலசிறி ரணதுங்க தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.