நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு !

 


வெசாக் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

வெசாக் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் புனித பூமி மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வெசாக் வலயத்தை அண்மித்த பகுதிகளில் நாளை முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

வெசாக் தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இக் காலப்பகுதியில் மதுபானசாலைகளை மூடுவதை ஒழுங்குபடுத்துவதற்கு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலதிக கலால் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.