இன்று நள்ளிரவு முதல் புகையிரத நிலைய அதிபர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!!

 


இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் (SLRSMU) மத்திய குழு இன்று இரவு முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.


ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு பிரதிப் பொது முகாமையாளர் (வணிக) பதவியை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.


தொழிற்சங்க மத்தியக் குழு அவசரக் கூட்டத்தைக் கூட்டி இந்தப் பிரச்சினை தொடர்பில் ஆலோசித்து, இந்த நியமனத்துக்கு எதிராக உடனடியாக 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.


இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அனைத்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சகல சேவைகளிலிருந்தும் விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.