புறோக்கரால் தாலிகட்டியவுடன் வெளியேறிய மணமகள்!!
யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் 22 வயதான மாணவிக்கு 31 வயது லண்டன் மாப்பிளை என கலியாணப் புறோக்கர் ஒருவர் ஏமாற்றி திருமணம் செய்து வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அத்துடன் மாப்பிளையின் பெற்றோர் இறந்துவிட்டதாகவும் மாப்பிளை லண்டனில் பெரிய பணக்காரனாக உள்ளதாக கூறி மாப்பிளையின் ஜாதகம் பெற்றோருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு யாழில் உள்ள பிரபல வைத்தியர் ஒருவரின் நெருங்கிய உறவினர் என தெரிவிக்க பெண்னின் பெற்றோர் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டுள்ளார்கள்.
மாணவியின் பெற்றோர் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனராம். இந்நிலையில் மகள் வெளிநாடு போனால் நல்லது என நினைத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.
அதனையடுத்து லண்டனில் வசிக்கும் யாழை சேர்ந்த 43 வயது நபர் , சீதனம் எதுவும் தேவையில்லை. கலியாணம் கட்டி 6 மாதத்துக்குள் மனைவியை லண்டன் எடுத்துவிடுவேன் என பெற்றோருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் தனக்கு உறவுகள் இல்லை என்றும் கொழும்பிலேயே தனக்கு உறவுகள், நண்பர்கள் இருப்பதாகவும் கூறி கொழும்பில் உள்ள திருமண மண்டபத்தில் பல்கலைக்கழக மாணவிக்கும் லண்டன் மாப்பிள்ளைக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டது.
மணமகள் தற்கொலைக்கு முயல்வதாக தெரிவிக்கப்பட்டு மண்டபத்தி்ன் கதவையும் உறவுகள் உடைக்க முற்பட்டபோது மண்டப முகாமையாளரால் கதவு திறக்கப்பட்டு மணமகள் வெளியே கொண்டுவரப்பட்டார்.
இந்நிலையில் மாப்பிள்ளை, புறோக்கரிடம் தனது வயதை கூறியதாகவும், மாணவியின் குடும்பம் வயது தொடர்பாக தமக்கு பிரச்சனை இல்லை என புறோக்கரிடம் சொன்னபடியால்தான் தான் திருமணத்திற்கு சம்மதித்ததாகவும் கூறினாராம்.
இதனையடுத்து அன்றே பெண் வீட்டார் யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றுவிட்டார்களாம். அடுத்த நாளே புறோக்கர் பெண்ணின் உறவுகளால் பிடிக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஜாதகக் குறிப்பையும் பெண்ணின் ஜாதகத்திற்கு ஏற்றது போல் புறோக்கரே மாற்றியுள்ளமையும் பெண்ணின் உறவுகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெண் வீட்டாரும், புறோக்கரும் பொலிஸில் முறையிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மாப்பிள்ளை யாழில் உள்ள பிரபல விடுதியில் தங்கியிருந்து மாணவியின் உறவுகளை சாந்தப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளாராம்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை