திருகோணமலை நீதிமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பு!!

 


திருகோணமலை நீதிமன்றத்தில் எதிரிக் கூண்டில் நின்ற  நபர் ஒருவர் உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 இன்றைய தினம் , (04) சட்டவிரோத ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில்  நீதவான் நீதிமன்றில் எதிரிக்கூண்டில் முற்படுத்தப்பட்டபோதே குறித்த நபர் இந்த தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

திருகோணமலை- சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல் துறையைச்சேர்ந்த யோகதாசன் லக்ஸன் வயது (25) என்பவரே உயிர்மாய்க்க முயற்சித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.