புதிரும் புறமும்...!
வாடும் பூமாலை சொல்லும்
மனமும் தினமும் போடும் போராட்டம்
வாட்டுகின்ற பொழுதும் சொல்லும்
தினமும் வாழ்வில் தொடரும் வாட்டம்
நீயின்றி வாழ்வும் வாழ்வா?
நதிகளில் இல்லை நீரோட்டம்
கடிகாரம் நொடிகள் தாண்ட
நித்தம் காட்டுகிறது தயக்கம்
தடுமாறும் நதிகள் இன்று..
தொலைந்த பாதை; அவை கடலில் சேரும் என்று
புதிரும் புறமும்
உறவும் நிலவும்
நிழலும் தொடரும்
கதிரும் படரும்
விதியும் சுழரும்
விழியும் சுடரும்
கொடுப்பதும் கொடுத்தாய்
கொடுமைகள்; அதை எடுத்தாய்
நெருங்கிய உறவை மறைத்தாய்
நெருப்பதில் என்னை விதைத்தாய்
வானம் கூட காணும் நிறமும்
அவ் வர்ணம் கூட என் சேலை உணரும்
பனியும் முகிலும் காணும் நிறமும்
என் சேலை தன்னில் எதுவரை தொடரும்?
வி.அபிவர்ணா
முல்லைத்தீவு.
கருத்துகள் இல்லை