குறட்டையை வருமானம் பெறும் உத்தியாக்கிய பெண்!


காதலனின் குறட்டையை வருமானம் பெறும் உத்தியாக்கியுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர்.

மெக்சிகோவைச் சேர்ந்த பெண் ஒருவர் காதலனின் குறட்டைச் சத்தத்தைப் பொறுக்கமுடியாமல் பல நாள் தூக்கமின்றித் தவித்திருக்கிறார். 26 வயது Ana என்பவரே இந்த பிரச்சினை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

33 வயதுக் காதலன் தனது குறட்டைச் சத்தம் மோசமானது இல்லை என்றும் கூறியுள்ளார். குறட்டையைக் காதலனைக் கேட்கவைக்க Ana அதனை பதிவுசெய்துள்ளதுடன், மறுநாள் தான் குரட்டையிடுவதைக் கேட்ட Anaவின் காதலன் சிரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இரைச்சலை மூட்டும் அந்தச் சத்தத்தைப் பணம் சம்பாதிக்கும் வழியாக மாற்ற ஒரு வழியை Ana கண்டுபிடித்தார். இசைக் கலைஞர்களானத் தமது நண்பர்களின் உதவியுடன் குறட்டைப் பதிவுகளை Spotify இசைச் செயலியில் பதிவேற்றம் Ana செய்தார்.

அதைக் கேட்க உலகம் முழுதும் ரசிகர்கள் இருப்பதாக அவர் கூறினார். Snoring Machine எனும் அந்த Spotify கணக்கை மாதந்தோறும் கேட்கும் 15,300 ரசிகர்கள் உள்ளனர்.

அதில் “Soft Snores” எனும் குறட்டை இசை ஆகப் பிரபலமானது. அதிலிருந்து அவர் சுமார் 25 பவுண்டு சம்பாதித்துள்ளாராம்.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.