வாழ்வியல் ஒருத்தி!
முதிர்ச்சி அடைந்த அறிவில்
துலக்கம் அடைந்த எண்ணத்தில்
கூர்மை அடைந்த நோக்கத்தில்
தீவிரம் அடைந்த பயணத்தில் வாழ்க்கையினைத் தொடர்ந்தாலும்...!
பலவும் சிலவும் ஆக
சிலவும் பலவும் ஆக
எண்ணற்ற நிகழ்வுகள்
நடந்தாலும் கடந்தாலும்
நிகழ்ந்து கொண்டிருந்தாலும்
அந்தப் பொழுதுகளை வைய
முடியுமா நம்மால்...?
நடந்தவை எல்லாம்
கடந்தவையாக
கடந்தவை எல்லாம்
நடந்தவையாக
நிகழ்வுகள் எல்லாம்
நிஜங்களாக
எதிர்ப்படும் நாட்கள் எல்லாம்
கேள்விகளாக எதிர்கொண்டு
நிற்காமல்...!
நமக்கு நாமே நற்பதிலென
உரம் சேர்க்கும் வாழ்வு
ஒன்றினை வாழ்ந்து
செழித்திட
மொத்தத்தையும் நித்தமும்
தாண்டுவது போலக் கடிதே...!
ஆயினும்
வாழ்வினின் ஆழ்தலில்
அர்த்தங்கள் ஆயிரம்
கல்லுக்குள் ஈரம்தனை
காண்பது போல் மகிழ்ச்சி
முட்களிடையே பிறக்கும்
கனியின் சுவையை
சுவைப்பது போல் மகிழ்வு!
வாழ்வின் முறைமையான
புரிதலில்
இம்மையிலும் மறுமையிலும்
நன்மையே என்றும் அறிவுடையோர்க்கு...!
-ஒருத்தி.
கருத்துகள் இல்லை