யாழில் , அலைபேசி திருடிய இளைஞன் கைது!!
யாழ்.திருநெல்வேலி - பரமேஷ்வரா சந்தியில் உள்ள தொலைபேசி திருத்தகத்தில் தொலைபேசி திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை திருத்தகத்திற்கு வந்த இளைஞன் அங்கிருந்த கையடக்க தொலைபேசி ஒன்றினை திருடி சென்றுள்ளார்.
கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராவில் கண்டதை அடுத்து , கண்காணிப்பு கமரா வீடியோ.
பதிவுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த போலீசார் வீடியோ பதிவு ஊடாக இளைஞனை அடையாளம் கண்டு , இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது , திருடிய கையடக்க தொலைபேசியை தான் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும் , வாங்கியவரை தனக்கு அடையாளம் தெரியாது எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து திருட்டு தொலைபேசியை வாங்கிய நபர் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை