வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் கைது!!
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையிலான அணியினரால் கடந்த வாரம் யாழ். நகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, வாள்வெட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் வாள்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 மற்றும் 20 வயதுடைய கொக்குவில் மற்றும் சுதுமலை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி கடந்த வாரம் கடை மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர்கள் கடையில் யூஸ் தருமாறு கோரியதாகவும் கடை பூட்டியதன் காரணமாக உரிமையாளர் தர மறுத்ததன் காரணமாக ஏற்பட்ட தகராறு காரணமாகவே தாக்குதலை மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட நபர்கள் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த தாக்குதலை 6 பேர் கொண்ட குழு மேற்கொண்டதாகவும் அதில் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை