நாற்காலியில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!!

 


இலங்கையில், குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகம் ஒன்றில் உள்ள நாற்காலியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் துப்புரவுப் பிரிவில் கடமையாற்றும் நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

களனி வெதமுல்ல சாந்தி விஹார மாவத்தையைச் சேர்ந்த 73 வயதான கருணாரத்ன ஆராச்சிகே தர்மசேன என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தின் மேல் தளத்தில் துப்புரவுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வசித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இராணுவச் சிப்பாய் ஒருவர் இன்று காலை கடமைக்காக துப்புரவுப் பிரிவுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​அதன் முன்னிருந்த நாற்காலியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் இறந்து கிடப்பதைக் கண்டு, மேலதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் தலங்கம பொலிஸ் அதிகாரிகள் சென்று சோதனையிட்ட பின், தலங்கம மரண விசாரணை அதிகாரி சமாதான நீதவான் பிரேமலதா அபேவர்தன சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.