தொண்டையில் உணவு சிக்கியதில் குழந்தை மரணம்!!
பொகவந்தலாவை பகுதியில் ஒரு வயது குழந்தைக்கு உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
26 வயதான தாய்க்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை பிரிட்வெலி தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா (1) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாய் ஒருவர் தனது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவூட்டிக் கொண்டிருந்த போது தாய்க்கு வலிப்பு ஏற்பட்டதுடன் குழந்தைக்கு தொண்டையில் உணவு சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து தாயும் குழந்தையும் கட்டிப்பிடித்த படி தரையில் கிடந்ததை கண்ட அயலவர்கள் விரைந்து இருவரையும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இருந்தபோதும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை