யேர்மனியில் திருவள்ளுவர் சிலை - பணிகள் தொடர்கின்றன!📸
யேர்மனியின் டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள Rheinischestr என்னும் முதன்மையான வீதியின் மையப் பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்கும் பெரும் பணியை முன்னெடுத்திருக்கிறோம். இது குறித்த அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.
திருவள்ளுவர் சிலை யேர்மனியிலேயே செய்யப்படுகிறது. கத்தரீனா பொக் என்னும் யேர்மனிய சிற்பி ஒருவர் சிலையை வடிவமைக்கின்றார். அநேகமாக திருவள்ளுவர் சிலையை வடிவமைத்த முதலாவது ஐரோப்பிய சிற்பி என்னும் பெருமையை கத்தரீனா பொக் பெற்றுக் கொள்வார்.
முதலில் திருவள்ளுவர் சிலையின் சிறிய மாதிரி வடிவம் செய்யப்பட்டது. அப்பொழுது நாம் அடிக்கடி பட்டறைக்கு சென்று மாதிரிச் சிலையை பார்வையிட்டதோடு, செய்ய வேண்டிய திருத்தங்களையும் கூறினோம். சிலையின் தோற்றத்தில் எமக்கு திருப்தி ஏற்படும் வரை சிற்பி கத்தரீனாவும் மீண்டும் மீண்டும் திருத்தங்களை செய்தார். இது நாம் எல்லோரும் இணைந்து திருவள்ளுவர் சிலையை உருவாக்குவது போன்ற மகிழ்வான உணர்வை கொடுத்தது.
திருவள்ளுவர் சிலையின் மொத்த உயரம் 3 மீட்டர்கள் ஆகும். 1.5 மீட்டர் உயரத்தில் பீடமும் அதற்கு மேல் 1.5 மீட்டர் உயரத்தில் திருவள்ளுவர் சிலையும் அமைகிறது. தற்பொழுது 1.5 மீட்டர் உயரமான மாதிரி வடிவம் உருவாக்கப்படுகிறது. அதையும் நாம் பார்வையிட்டு சம்மதத்தை தெரிவித்ததன் பிற்பாடு, இறுதியான சிலை வடிவமைக்கப்படும்.
மறுபுறம் பீடம் அமைப்பதற்காக, அந்த வேலையை பொறுப்பெடுத்துக் கொண்ட நிறுவனத்தினர் சிலை அமைகின்ற இடத்தில் மண் மாதிரிகளை பெற்றுக் கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். தேவையான பொருட்கள் வந்து சேர்ந்ததும் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் பீடம் அமைக்கின்ற வேலை ஆரம்பமாகும் என்று எமக்கு அறியத் தந்திருக்கிறார்கள்.
திருவள்ளுவர் சிலையை அமைத்து முடிப்பதற்கு எமக்கு இன்னும் 20.000 யூரோக்கள் தேவைப்படுகின்றது என்பதை ஏற்கனவே அறியத் தந்திருந்தோம். திருவள்ளுவர் சிலைக்கான பங்களிப்பை வழங்குபவர்களுக்கு வருமானவரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கத்தக்க பற்றுச்சீட்டையும் நாம் தருவோம்.
சிலை திறப்பு விழாவின் போது பங்களித்தவர்களின் பெயர் விபரங்களோடு முழுக் கணக்கறிக்கை வெளியிடப்படும்.
Verein fuer tamilsche Kuenstler e.V.
Volksbank Dortmund Nord West
DE09 4406 0122 4086 4321 00
GENODEM1DNW
இதுவே எமது வங்கி இலக்கம்
பேபால் ஊடாகவும் உங்கள் பங்களிப்பினை செய்யலாம். paypalme/valluvar2023
எல்லோரும் இணைந்து திருவள்ளுவருக்கு ஒரு சிலை அமைப்போம்.
கருத்துகள் இல்லை