நன்றியை அறிவித்தார் கஜேந்திரகுமார்!!
மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் அப்பட்டமான சட்டவிரோதமான நடவடிக்கைகளிற்கு எதிராக குரல் எழுப்பியவர்களிற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
என்னையும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏனையஉறுப்பினர்களையும் குறிவைத்து ஜூன் 2ம் திகதி மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில்காவல்துறையினரின் அப்பட்டமான மீறலிற்கு எதிராக குரல்எழுப்பிய அனைவருக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகி;ன்றேன் என அவர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் திகைப்பூட்டும்நிலையை அடைந்துள்ள சூழலில்தங்களிற்கு ஆபத்து ஏற்படலாம் என தெரிந்தும் ஆதரவாகயிருந்த பல தனிப்பட்ட நபர்கள் அமைப்புகளிற்கும் நான் எனது நன்றியை தெரிவித்துகொள்ளவிரும்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கமும் அதன்முகவர்களும் தங்கள் தோல்விகளை மறைப்பதற்காக இனவாதத்தை தூண்டுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிங்கள மக்கள் அரசாங்கத்தின் தீயநோக்த்தினை இனம் கண்டு பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லீம்மக்களிற்கு ஆதரவாக வெளிப்படையான நிலைப்பாட்டை எடுப்பது – துரோகிகள் என முத்திரைகுத்தப்படும் ஆபத்திருந்தும் -உண்மையிலேயே நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை