வீதிக்கு இறங்கிய விவசாயிகள்!
கிளிநொச்சியில் விவசாயிகளால் போராட்டம் ஒன்று இன்று(28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நெல்லுக்கான விலையினை உரிய நேரத்தில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுவதில்லை என தெரிவித்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இன்று காலை 9 மணியளவில் கரடிபோக்கு சந்தியில் போராட்டம் ஆரம்பமானது.
கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நெல் சந்தைப்படுத்தல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பித்து கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்து. தற்பொழுது நெல்லினை 48 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கே கொள்வனவு செய்வதாகவும், தமக்கு அறுவடை முடிவில் செலவீனமே 85 ரூபாய் முடிவடைவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் அனைத்துமே வெறுமனே காணப்படுவதாகவும், இருப்பினும் நெல் கொள்வனவு உரிய காலத்தில், உரிய விலையில் கொள்வனவு செய்யப்படவில்லை எனவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனா்.
தமது பிரச்சினை அடங்கிய மனுவை மேலதிக அரசாங்க அதிபர் ஶ்ரீமோகனிடமும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடமும் விவசாயிகள் கையளித்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை