19ஆம் திகதி குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை!!
கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இம்மாதம் 19ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம விகாரையில் வருடாந்த எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் எசல பெரஹரா உற்சவம் இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகி, ஜுலை 3ஆம் திகதி மஹா பெரஹரா இடம்பெற்று, மறுநாள் பெரஹரவுடன் ‘தியா கெப்பீம’ நிகழ்வுடன் பெரஹரா நிகழ்வுகள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரஹரா திருவிழாவை முன்னிட்டு விசேட கடமைக்கு வரவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்க மூன்று பாடசாலைகளின் கட்டிடங்களை பொலிஸ் திணைக்களம் கோரியுள்ளது.
அதன்படி, செல்லக்கதிர்காமம் மஹா வித்தியாலயம், தெட்டகமுவ மஹா வித்தியாலயம் மற்றும் கதிர்காமம் தேசிய பாடசாலை ஆகியன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
அதேசமயம் விடுமுறை அளிக்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 05 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை