தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!!

 


யாழ்ப்பாணத்தில்  தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலாளர் அ. சிவபாலசுந்தரனின் தலைமையில் நாளை (09) காலை 09 மணி தொடக்கம் 1 மணிவரை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.


பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றி கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகள் குறித்தும் அவை தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களும் குறித்தும் மேற்படி கலந்துரையாடலில் பேசப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம், கல்வித்துறை சார்ந்தோர், மதத் தலைவர்கள், பொலிஸார், தனியார் கல்வி நிலைய நிறுவனங்கள், பெற்றோர், மாணவர்கள் போன்றோர் இக் கலந்துரையாடலில்  கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந் நிலையில்,  ஓய்வற்ற கல்விச் செயற்பாடு மாணவர்களைச் சலிப்படையவும் மன ரீதியாக விலகலைக்  கொடுப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


 




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.