விபத்தில் பொலிஸ் பரிசோதகர் பலி!!

 


ஹோமாகம பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பிரதான பரிசோதகர் இன்று (28) காலை மகும்புர அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் பாணந்துறையைச் சேர்ந்த ஜகத் சமிந்த பெரேரா என்ற 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் பரிசோதகரை எதிரே வந்த பஸ் மோதியதில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் பரிசோதகர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.