காற்று மாசு - அதிகரிக்கும் இதயநோயாளர்களின் எண்ணிக்கை!!
நாட்டில் இதயநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் அதிகளவில் உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் அனிந்து பத்திரன தெரிவித்துள்ளார்.
காற்று மாசுபாடு அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆபத்தை குறைக்க வெளியில் நடமாடும் போது முடிந்தவரை முகக்கவசங்களை அணிய வேண்டும் என வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு மற்றும் இதய நோய் தொடர்பில் முறையான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை