நட்பினால் வந்த சோதனை - குடும்ப பெண் சாவு!!

 


யாழ்ப்பாணம் அளவெட்டியில் தீக் காயங்களினால் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அளவெட்டியைச் சேர்ந்த ரெஜி நிசாந்தன் நிசாநந்தினி (வயது 43) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தவராவார்.  கடந்த 13ஆம் திகதி எரிகாயங்களுடன் அவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்  மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி நேற்றிரவு  குறித்த பெண் உயிரிழந்தார்.

 “உயிரிழந்த பெண்ணின் கணவருடன் நெருக்கமான  நட்பாக இருந்த இளைஞர் ஒருவர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். போதைக்கு அடிமையான அந்த இளைஞன்,   

போதைப்பொருள் வாங்குவதற்காக சில நாட்களாக குடும்பப்பெண்ணை அச்சுறுத்தி பணம் பெற்று வந்துள்ளார். இந்த விடயம் கணவருக்கு தெரிய வர அந்த இளைஞரை வீட்டுக்கு வரவேண்டாம் என்று கண்டித்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி குடும்பப்பெண் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு தீ பரவியுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டது.


எனினும் அவரை எரிகாயங்களுடன் மீட்ட இடத்தில் மண்ணெண்ணெய்ப் போத்தலோ, கலனோ இருக்கவில்லை. அவரது எரிகாயங்களுக்கு 23 வயது இளைஞனே காரணம் என குடும்பப் பெண்ணின் உறவினர்கள் மற்றும்  அவர்கள் விசாரணையில் தெரிவித்தனர்” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. 

குறித்த சம்பவத்தையடுத்து உறவினர்களினால் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

மேலும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டார்.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.