இந்தோனேசியாவில் தமிழ்க்குடும்பப் பெண் சாவு!📸


கடந்த 2012ம் ஆண்டு இந்தோனேசியாவில் தஞ்சம் அடைந்த ஈழத் தமிழ் ஏதிலியான அசேக்குமார் லலிதா அவர்கள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியம் பலனளிக்காத பட்சத்தில் தற்போது இன்று சாவடைந்துள்ளார்.


இவரின் புகலிடக் கோரிக்கை  மறுக்கப்பட்ட நிலையில்  கணவன்  அசோக்குமார்  மற்றும்  இரு பிள்ளைகளுடன்  மெடான் நகரில்  பெலவான்  தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் திருமதி லலிதா அவர்கள்   சுகவீனமுற்றிருந்தார். அவருக்குரிய போதிய மருத்துவவசதிகள் வழங்குவதற்குரிய வசதிகள் அற்ற சூழலில் இன்று அவர் சாவடந்துள்ளார். இந்த செய்தியானது புகலிடக் கோரிக்கைக்காக ஐ.நா அகதிகள் நிறுவனத்தில் பதிவு செய்துவிட்டு சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துவரும்  உறவுகளுக்கு மிகுந்த  கவலையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.  


தயவுசெய்து உலகெங்குமுள்ள தமிழ்அமைப்புகள் இந்தோனேசியாவிலுள்ள ஐ.நா தலைமையகத்துடன்  தொடர்பினை ஏற்படுத்த வேண்டுகிறோம்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.