பிரான்சில் இடம்பெற்ற முன்னாள் போராளி மணிவண்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!

 


பிரான்சு மண்ணில் கடந்த 20.06.2023 அன்று சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி அமரர்.மணிவண்ணன்(ராசன்) அவர்களின் இறுதி கண்ணீர் வணக்க நிகழ்வு இன்று (04.07.2023) செவ்வாய்க்கிழமை பாரிஸ் புறநகரில் அமைந்துள்ள வில்தனுஸ் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இவர் தாயகத்தில் வாழ்ந்த காலத்திலும்,புலம் பெயர் தேசத்திலும் தொடர்ந்து தேசவிடுதலைக்காக பணியாற்றியமைக்கு மதிப்பளிக்கும் வகையில் மண்ட ப வாயிலில் தமிழீழ தேசியக்கொடி கட்டப்பட்டு அவரின் பூதவுடல் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அவரைப்பற்றிய நினைவுரையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஆற்றப்பட்டுக் கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.