பொலிசாரை மோதித் தள்ளிய மோட்டர் சைக்கிள்: ஒருவர் கைது!


 வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரை மோதித் தள்ளிய மோட்டர் சைக்கிள்: ஒருவர் கைது


வவுனியாவில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசாரை மோட்டர் சைக்கிள் ஒன்று மோதியதில் பொலிசார் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


நேற்று (16.07) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வீதிக் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசார் வீதியால் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றை வீதியின் குறுக்காக சென்று வழிமறித்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டர் சைக்கிள் போக்குவரத்து பொலிசாருடன் மோதி விபத்துக்குள்ளானது.


குறித்த விபத்தில் போக்குவரத்து பொலிசார் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் குறித்த மோட்டர் சைக்கிளின் சாரதி வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.