கரும்புலி மறவர்களுக்கு காணிக்கை!


கரும்புலி மறவரே கரும்புலி மறவரே

எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிந்தீரே

எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிகையிலே

வெந்தழிந்தாலும் வீழ்விலை என்றீரே 


கரும்புலி மறவரே கரும்புலி மறவரே

நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைத்தீரே

நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைக்கையிலே

பெருக்குண்ட  துயரெலாம் தூசுகள் என்றீரே 


கரும்புலி மறவரே கரும்புலி மறவரே

தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவினீரே

தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவுகையிலே

ஏய்ந்த துன்பமும் இன்பமே என்றீரே 


கரும்புலி மறவரே கரும்புலி மறவரே

இழந்த தமிழீழம் ஈட்ட முனைந்தீரே

இழந்த தமிழீழம் ஈட்ட முனைகையிலே 

உழந்த நெஞ்சிலும் உவகையே என்றீரே 


கரும்புலி மறவரே கரும்புலி மறவரே

என்மொழி என்னினம் என்நிலம் என வாழ்ந்தீரே

என் மொழி என்னினம் என்நிலம் என வாழ்கையிலே

புன் மொழி கேட்பினும் புன்னகையுடன்  சிந்தனை செய்து

எம் மொழியை எம்மினத்தை எம்நிலத்தை

சிறப்புடனே காத்திடற்கே என்றீரே 


கரும்புலி மறவரே கரும்புலி மறவரே

இனித் தமிழீழத்தையே எண்ணி வெடித்தீரே

இனித் தமிழீழத்தையே எண்ணி வெடிக்கையிலே

பனித்த கண்ணீரையும் பாங்கே மறைத்து

தனித்த எம் மக்கள் செழித்த வாழ்வுக்கே என்றீரே 


கரும்புலி மறவரே கரும்புலி மறவரே

இனித் தமிழீழ மக்கள் இழிவை

இம்மியும் பொறுக்கமாட்டார்

தனித் தமிழீழம் வாங்க

இனியும் பின்வாங்கமாட்டார்

தீக்குழம்புருக்கித் தெறிக்கும் எரிமலை போல் 

கொதித்தெழுவர்

எம் தமிழீழம் எமக்கினி மலரும்

வீழாது உம்புகழ் விளைய மாளாது உம்வீரம் 


கரும்புலி மறவரே கரும்புலி மறவரே

உலகமெலாம் உம் புகழ் செழிக்க

உலகிலுள்ள தமிழரெலாம் ஒன்று கூடி

பெரும் புரட்சி செய்து

யார் யாரோ அழித்த எம்மினத்தை

உம் நினைவால் திரண்டு கூடி

யாப்புறவே ஈழம் காண்போம்!.


-நிலாதமிழ்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.