இலங்கையில் சிக்கிய போதைப் பொருள் கடத்தல் முக்கியஸ்தர்!
டுபாயில் இருந்து போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் பாதாள உலக தலைவரின் முக்கிய உதவியாளர் ஒருவரை கலால் திணைக்களம் கைது செய்துள்ளது.
இதன்போது 40 கிராம் ஹெரோயின், வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் 3 ரவைகளுடன் அவர் கைது செய்யப்பட்டதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி அனுரகுமார அலுத்கே தெரிவித்தார்.
கைதான சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை