மனிதர்கள் பல விதம் - உண்மைக்கதை!!


புருசன் செத்துட்டான்

பொட்டப்புள்ளையை காப்பாற்ற 

மரத்தடியில் நைட்டு சாப்பாட்டு கடை போட்டாள் இளவயது ப்ரியா.


கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான் பர்மிசன் யார்கிட்ட கேட்ட

மிட்நைட் ஆச்சு கடையைச்சாத்துன்னு

எதையாவது சொல்லிதினமும் ஓசியில வயிறுமுட்ட தின்பான். அவன் பார்வையே சரி இல்ல..


பணம் குடுத்து சாப்பிடுபவர்கள் இன்னும் ஒரு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிடமாட்டார்களா என ஏக்கமாயிருக்கும். அவர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறுவாள் ப்ரியா.


ஆனால் இந்த ஓசிபோலீஸ் ஒருதோசை

குறைவாக சாப்பிடமாட்டானா

என நினைத்தால்  அவன் தான் ஆறஅமர உட்கார்ந்து நிறைய தின்னுட்டு 

பார்சலும் வாங்கிட்டு போவான்.

பொம்பிள பொறுக்கி..


என்ன செய்ய? மரத்தடியில் கடைபோட்டால் இப்படித்தான் வருவார்கள்...

நம்ம தலைவிதி அப்படின்னு போலீசுக்கு வேண்டாவெறுப்பாக பரிமாறுவாள்.


என்ன சுவையா சமைத்தாலும்

டவுனுக்குள் நாலுகடை சாத்தினபிறகுதான்

நாலுசனம் வரும் ப்ரியாவின் கடைக்கு...

நாலு வருசம் ஆகியும்  சேமிப்பு எதுவுமில்லை..


தனது கைப்பக்குவத்தின் மீது நம்பிக்கைவைத்து வட்டிக்கு பணம் வாங்கி டவுனுக்குள் கடையை பிடித்தாள்.


ஒரே வாரத்தில் ப்ரியாவுக்கு நம்பிக்கை வந்திடுச்சு அப்பாடா இனி ஓரளவுக்கு தப்பிச்சிடலாம்ப்பா .....கடை வாடகை, வட்டி போக நாலுகாசை கண்ணுல பார்த்திடலாம்னு நினைச்சநேரம் மறுபடியும் அதே ஓசி போலீஸ் உள்ளே வர்றான்.


வாடி வா, இன்னைக்கு உன்னை நாலுவார்த்தை நல்லா கேட்கனும். இனி உனக்கு நான் பயப்படத்தேவையில்லை

இன்னிக்கு சாப்பிட்டதுக்கு  இப்பவே காசைக்குடுடான்னு சத்தமா கேட்கனும்னு நினைச்சவேளையில்.


இந்தாம்மா ப்ரியா இதுல ஒரு லட்சரூபாய் இருக்கு, நாலு வருசம் நான் உன் மரத்தடி கடையில் சாப்பிட்டதுக்கான பில்.


உன்புருசன் என்னோட படிச்சவன்தான்,

புருசன் இல்லாம அந்த நைட்டுநேரம்

 நீ அந்தஇடத்தில் வியாபாரம் பண்றது எவ்வளவு ரிஸ்க் எனத்தெரிஞ்சதால்

உன்னோட பாதுகாப்புக்காகத்தான்

நான் தினமும் அங்கே வந்தேன்.

நான் கொடுக்கும் இந்தப்பணம்தான்

மரத்தடிக்கடையின் லாப பணம்.

வச்சிக்கோ....கையில் கொடுத்தான்


ப்ரியாவுக்கு ஒரு நிமிடம் என்னசொல்வதென்றே தெரியவில்லை,

கடைசியாகச்சொன்னாள்...


வாங்க  சாப்பிடுங்க!


எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்ல....


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.