கால தெய்வங்களுக்கு காவிய அஞ்சலி!!

 


இன்றைய நாள் 05 யூலை

மற்றவர்கள் இன்புற்று இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத் துணிந்த தெய்வீகத் துறவிகளை நினைவில் கொண்டு நீள்கின்றது இந்தப் பதிவு.


எமது இனத்தின் தற்காப்புகவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள்.

இவர்கள் வித்தியாசமானவர்கள். அபூர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும், பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள்.

இந்த வீரன் தன்னைவிட தன் இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்த குறிக்கோளை அடைவதற்க்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அந்தக் குறிக்கோள் அவனது சுயத்திற்க்கு அப்பால் நிற்க்கும். மற்றவர்களின் நலன் பற்றியது. நல்வாழ்வு பற்றியது. மற்றவர்கள் இன்புற்று இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்தப் தெய்வீகப் பிறவிகள்தான் இவர்கள்.


ஒரு புனித யாத்திரையில் அவர்கள் போனார்கள். கண்ணீர் வடித்து நிற்கும் எம் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு பிறக்கும் என்ற அசையாத நம்பிக்கையில் அந்தப் பயணத்தை தொடர்ந்தார்கள், இவர்களின் அற்புத சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்று வாழும்.


முகத்தையும் மறைத்து பெயரையும் புகழையும் வெறுத்து, இலட்சிய மூச்சாக விடுதலைக் காற்றுடன் கலந்து விட்ட இந்த சரித்திர நாயகர்களை நான் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


ஈடு இணையற்ற இவர்களது ஈகமும் மன ஓர்மமும் சமுதாயத்தில் எற்படுத்தும் தாக்கம் எத்தகையது, என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளானது மானிட ஆய்வாளர்கள் மத்தியில் ஆராய்ச்சிக்குரியனவாகிவிட்டன.


இன்று உலகெங்குமுள்ள அடக்குமுறையாளர்கள் தங்களுக்குள் கைகோர்த்தபடி, சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க விழையும் மக்களை மிருகத்தனமாக அடக்கி ஒடுக்க முனைகின்றனர். இவர்களிடம் ஆள், ஆயுத பலம் உண்டு. ஆட்சி அதிகாரம் உண்டு. தொழில் நுட்பவலுவுண்டு. இவற்றை தேவைப்படும் இடங்களுக்கு, தேவைப்படும் நேரங்களில் கொடுத்து மாறி, போராட்ட சக்திகளை பலம் இழக்க செய்து, தமது அடக்கு முறைகளை வலுப்படுத்துகின்றனர். இந்த நவீன அடக்கு முறையாளர்களுக்கு ஈடு கொடுக்க கூடிய அளவிற்கு ஆள்-ஆயுத தொழில் நுட்பத்திறன்களைப் போராட்ட சக்திகள் கொண்டிருப்பதில்லை.


மிகக் குறைந்த அளவில் இவர்களுக்கு இருக்கும் போராட்ட திறன்களில் இருந்து மிக உச்ச பயன்களைப் பெற்றாலொழிய போராட்ட சக்கரத்தை ஒர் எல்லைக்கப்பால் நகர்த்த முடியாது. எனவே ஒடுக்கு முறையாளர்களின் நாடியை ஒடுங்கச் செய்யும் அளவுக்கு, பல்வேறு திசைகளில் இருந்தும் வேவ்வேறு வடிவங்களில் போர்ச்சக்கரம் நகர்த்தப்பட வேண்டும்.

களம் புகுவதற்கு பல நாட்கள் முன்னமே தங்களுடைய சாவை தெரிந்து கொண்டு விடுகிறார்கள். 

'அடுத்த நிமிடத்தில் சாகப் போகின்றேன்' என்ற உண்மையைப் பூரணமாகத் தெரிந்து கொண்டுதான் வெடிமருந்தை தங்களுடன் கொண்டு செல்கிறார்கள். இவைகள் ஒரு சாதாரண வீரனால் செய்யப்பட முடியாதவை. இதைச் செய்வதற்கு என்றொரு ஆத்மீக பலம் தேவை. தன்னை தற்கொடை செய்து கொள்ளத் தயாரான மனோதிடம் வேண்டும். தனது இறுதி நேரத்திலும் கூட பதற்றம் இன்றி, உறுதியுடன் குறி பிசகாது எதிரியைத் தேடி ஓடும் வீரம் தேவை. விரக்தி காரணமாகவோ, முட்டாள்தனமாகவோ தன்னை அழித்து கொள்ளும் தற்கொலை முயற்சியைப் போலல்ல இது. அல்லது எதிரியின் கண்ணோட்டத்தின்படி கொடூரம் மிக்கதும் மானிட இனமாக இல்லாததுமான ஒரு பூதம் அல்ல. இது , அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு தேசிய இயக்க சக்திக்கு உந்து விசையாக விளங்கும் உயரிய போர் வடிவம்தான் இந்த வீர்ர்கள்.


உலகின் எந்த ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளப்பட முடியாததும், உலகின் எந்த தொழில் நுட்பத்தாலும் தடுக்க முடியாததும், உலகின் எந்த அரச இயந்திரத்தாலும் அடக்க முடியாததும்தான் எங்களது இவர்களின் மனோபலம். இந்த மனோபலம் வீர உணர்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு மட்டுமல்ல. எமது சமுதாய

எண்ணவோட்டத்தில் பிரளயத்தை எற்படுத்தப்போகும ஒரு அரசியல் வடிவமுமாகும்.


ஒவ்வொரு வீரரும் தனது உயிரை போக்கிக்கொள்ளும்போது நிகழும் பூகம்பம், விடுதலைப் போரட்ட சக்கரத்தை முன்னோக்கி தள்ளிவிடுவதுடன் வீரம்மீக்க, யாருக்கும் அடிபணியாத, அடக்க நினைப்பவரை நடுங்க வைக்கும் ஆற்றல் கொண்ட தமிழ் சமுகத்திற்குத் தேவையான உணர்வையும் ஊட்டி விடுகின்றது.


தேச பக்தியையும் வீர உணர்வையும் அடித்தளமாக கொண்ட இத்தகைய மனோபலம் எமது மக்களிடம் இருக்குமாக இருந்தால், உலகில் எவரும் எம்மை எதுவும் செய்ய முடியாததுடன், சுதந்திரத்துடனும் கௌரவத்துடனும் வாழும் பலத்தை நாம் பெற்று கொள்ள முடியும்.

இது உலக அதிசயங்களில் புதியதொன்றாகும்.


களம்புகும் கரும்புலிகளின் பிரமிப்பூட்டும் வீரச் சாதனைகள், பேரினவாத வர்க்கத்திற்கு கிலியை உண்டுபண்ணுகின்ற அதே சமயம், அந்த உன்னதமான அர்ப்பண உணர்வு எற்படுத்தும் சமுகத் தாக்கம், குடிமக்களின் மனதில் இருக்கும் சுதந்திர ஒளியை இன்னும் வளர்த்து செல்லும் என்பது உறுதி. நாம் ஒவ்வொருவரும் எம் தேசவிடுதலைக்கு ஆற்றவேண்டிய பணிகள் நிறைந்து கிடக்கின்றன. அவற்றை நாம் புரிந்து கொண்டு செயற்படும் போது விடுதலை நோக்கிய பாதைகள் கண் முன்னே விரியும்.



ஆக்கம் .- வி. சுமி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.