காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய வெள்ளைக்காரர்!!

 


நம்மவர்களில் சிலர் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என நாகரீக மோகத்தில் திரியும் இக்கால கட்டத்தில் வெள்ளைக்காரர் ஒருவர்  முருகனுக்கு  காவடி எடுத்து தனது பகிதியை வெளிப்படுத்திய  சம்பவம்   பலரையும்   வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் கனடா - மொன்றியாவில் உள்ள வேல் முருகன் கோவிலில் அண்மையில்  இடம்பெற்றுள்ளது. வேல் முருகன் கோவில் உற்சவத்தின் தேர்த் திருவிழா தினமன்று குறித்த நபர் காவடி எடுத்துள்ளார்.

தமிழர்களின் ஆதிகடவுளான  முருகனுக்கு  இந்துக்கள் பக்தி பூர்வமாக  காவடி எடுத்து நேர்த்திகடன்கள் செய்வது வழமை. ஈழத்தில் மட்டுமல்லாது , புலம்பெயர் தேசத்திலும்    நம் பாரம்பரியங்கள் நம் மக்கள் வாழும் இடமெல்லாம் வியாபித்துள்ளது.

அதேசமயம்  எமது தெய்வங்களின் மீது  வெளிநாட்டவர்களும் ஆர்வம் கொண்டு வணங்கி வருவதும்,  தமிழர் திருநாளை  கோலாகலமாக  கொண்ட்டாடியும் வருகின்றனர்.

அந்தவகையில்  கனடா வேல் முருகன் ஆலயத்தில்  வெள்ளைக்காரர் ஒருவர் காவடி எடுத்து தன் பக்தியை வெளிப்படுத்தியுள்ளமை  இந்து மக்களை புழகாங்கிதமடைய வைத்துள்ளது.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.