மகரகம வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமை!!
கொழும்பு- மஹரகம அபேக்சா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவின் கதிரியக்க நிபுணர்களால் நோயாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கடும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
கதிரியக்க நிபுணர்களின் அசமந்த போக்கினால் 490க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருக்கின்றதாகவும் இவ்வாறு காத்திருக்கும் நோயாளர்களில் அவசரமாக சிகிச்சை தேவைப்படுபவர்களும் உள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்குள்ளவர்கள நோய் நிலைமையில், ஒருநாள் தாமதம் கூட நோயாளர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாததாக மாற்றிவிடும் என புற்றுநோயியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முன்னர் மணித்தியாலத்திற்கு 8 முதல் 10 நோயாளிகளிற்கு சிகிச்சைவழங்கப்பட்ட நிலையில் தற்போது தொழில்நுட்பவியலாளர்களின் திறமையின்மை காரணமாக மணித்தியாலத்திற்கு நான்கு அல்லது ஐந்து பேருக்கு மாத்திரம் சிகிச்சை வழங்கமுடிவதாகவும நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் நடவடிக்கையை கண்டித்துள்ள மருத்துவர்கள் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காணவேண்டும் எனவும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற உதவ வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை