கண்காட்சிக்கான செயற்பாடுகள்! தீவிரம்!!

 


யாழ்ப்பாணத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் Glocal Fair கண்காட்சியானது பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சியானது நாளை மற்றும் நாளை மறுதினம் (15 -16) யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெறவுள்ளது.

இதில் தொழில் அமைச்சின் கீழான சகல திணைக்களங்கள், ஊழியர் நம்பிக்கை நிதியம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் மத்தியவங்கி என்பவற்றின் சேவைகளை ஒரே இடத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் நிவேதிகா கேதீசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறன நிலையில், தொழில் திணைக்களத்தினால் ஊ.சே.நிதி தொடர்பாக விசேட கவனம் செலுத்துவதுடன் கீழ்க்காணும் சேவைகள் வழங்குவதற்கும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கான முன்னாயத்த செயற்பாடுகள் இன்றைய தினம் (14-07-2023) மிகவும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.