வீட்டில் இலட்சுமி தங்கவேண்டுமா!!

 


காலம் காலமாக நம் முன்னோர்கள் ஒரு விஷயத்தை செய்து வந்தால் அதற்கு பின்னால் ஏராளமான காரணங்கள் ஒளிந்து கொண்டிருக்கும்.

அறிவியல் ரீதியாக இன்று நம் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பலவும் நன்மை என நிரூபிக்கப்பட்டு வருகிறது.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மட்டும் அல்லாது நல்ல நாட்கள், விசேஷங்கள் என்று வீட்டில் எது நடந்தாலும் இந்த ஒரு விஷயத்தை அவர்கள் செய்து வந்தனர்.

குறிப்பாக குழந்தை பிறந்த வீட்டில் கண்டிப்பாக இன்றும் கூட நிறைய பலர் இதை கடைபிடிக்கின்றனர். அது தான் சாம்பிராணி போடும் தூபம் ஆகும். 

மரத்திலிருந்து வடியும் ஒரு விதமான பிசினில் இருந்து தயாரிக்கக்கூடிய இந்த சாம்பிராணி உற்பத்தி முன்பளவுக்கு தற்போது இல்லை.

இந்த தூய சாம்ராணியை கட்டியாக வாங்கி அதை வீட்டிலேயே உடைத்து வைத்துக் கொள்வர். இந்த பொடியை தான் தூப காலில் போட்டு வீடு முழுவதும் காண்பிப்பார்கள்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.