திருடன் மீது காதல் - சுவாரஸ்யமான காதல் கதை!!
தனது செல்போனை பறித்துகொண்டு சென்ற திருடன் மீது பிரேசில் நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் காதல் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிரேசில் நாட்டை சேர்ந்த இமானுவேலா என்ற இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் ஒருவர் இமானுவேலாவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இமானுவேலா திருடன், திருடன் என கத்தினார். இருப்பினும் கண் இமைக்கும் நேரத்திற்குள் அண்டஹ் திருடன் தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.
இந்த நிலையில் செல்போனை பறித்த வாலிபர் அதை எடுத்து பார்த்த போது, அதில் இமானுவேலாவின் புகைப்படத்தை பார்த்தார். இவ்வளவு அழகான பெண்ணிடம் செல்போனை பறித்துவிட்டோமே என வருந்திய அவர், இமானுவேலாவை நேரில் சந்தித்து அவரிடம் போனை திருப்பி கொடுத்தார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த இமானுவேலா, திருடனை மன்னித்ததோடு அவருடன் நட்பாக பழக தொடங்கினார். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருவதாக கூறுகிறார்கள்.
இவர்களது பேட்டி டுவிட்டரில் வைரலாகி 2,200-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை