சிங்கள எம்.பிக்கு நீதிபதி கொடுத்த பதிலடி!!

 


முல்லைத்தீவு - குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா நேற்றைய தினம் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது குருந்தூர்மலைப் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவும் வருகைதந்திருந்தார்.

இதன்போது நீதிபதி ரி.சரவணராஜா, குருந்தூர் மலை வழக்குத் தொடர்பிலான விசாரணைகளை இரு தரப்பு சட்டத்தரணிகளுடனும் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது இடையே குறுக்கிட்ட சரத்வீரசேகர, தன்னை அறிமுகப்படுத்தி தானும் அங்கு கருத்துத் தெரிவிக்க முற்பட்டார்.

எனினும் அவரது கருத்தினை ஏற்க மறுத்த நீதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இங்கு கருத்துத் தெரிவிக்கமுடியாதென கூறினார்.

அதோடு , இங்கு நீதிமன்ற விசாரணையே இடம்பெறுவதாகவும், அங்கிருந்து சரத் வீரசேகரவினை விலகிச் செல்லுமாறும் எச்சரித்த நிலையில் சரத் வீரசேகர அங்கிருந்து விலகிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.