போதகர் ஜெரோம் தொடர்பில் வெளியான தகவல்!!
சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம்பெர்ணாண்டோ தொடர்பில் இலங்கையில் அவரின் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து பல விசாரணைகள் இடம்பெறும் நிலையில் சிங்கப்பூரிலிருந்து அவர் இங்கிலாந்து சென்றுள்ளார்.
இங்கிலாந்தில் அடுத்த வாரம் அவர் ஆராதனை நிகழ்வொன்றை நடத்தவுள்ளார். இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.
மதங்களுக்கு எதிரான கருத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியிருந்த நிலையில் அவர் மே16ம்திகதி சிங்கப்பூர் சென்றிருந்தார்.
இதனை தொடர்ந்து 21ம்திகதி அவர் நேரலை நிகழ்வொன்றின் தனது கருத்துக்களிற்கு மன்னிப்பு கோரியிருந்ததுடன் தான் இலங்கைக்கு திரும்பிவருவேன் என அவர் தெரிவித்திருந்த போதிலும் அவர் திரும்பிவராததுடன் அவரது பிள்ளைகள் மனைவி ஜூன்2ம்திகதி நாடு திரும்பினர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ்பேச்சாளர் , போதகருக்கு எதிரான பயணத்தடையை குடிவரவு துறை அதிகாரிகளிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதோடு குடிவரவுதுறை அதிகாரிகளே நடவடிக்கை எடுக்கவேண்டும்,இலங்கைக்கு அவர் திரும்பினால் அவரை கைது செய்து சிஐடியினரிடம் ஒப்படைக்கலாம் எனவும் பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை