மீண்டும் முடங்குமா வடக்கிற்கான ரயில் சேவை!!

 


மாஹோ சந்திக்கும் அனுராதபுரத்துக்கும் இடையிலான பாதை புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு புனரமைப்பு வேலை ஆரம்பிக்கப்பட்டால் வடக்கு மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் தொடர்ந்தும் தடைபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையில் புனரமைக்கப்பட்ட ரயில் பாதை கடந்த வியாழக்கிழமை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

அநுராதபுரத்திகற்கும்  ஓமந்தைக்கும் இடையில் நேற்று வெள்ளோட்டத்திற்காக 100 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் வண்டி பயன்படுத்தப்பட்டது.

அதேசமயம் வடக்கு மார்க்க ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததன் மூலம் காங்கேசன்துறைக்கும் கொழும்புக்கும் இடையிலான பயண நேரம் சுமார் ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்கள் குறையும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரயில் சேவைகள் இன்று(15)முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.