ஃபெடரருக்கு விம்பிள்டன் கொடுத்த கௌரவம்!!
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர் தொடர்ந்து 302 வாரங்கள் உலகின் நம்.1 டென்னிஸ் வீரராக இருந்தவர் ஆவார்.
இவர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் 8 முறை விம்பிள்டன் கிண்ணத்தையும் வென்றிருக்கிறார்.
அதுமட்டுமல்லாது, உலகின் பல முன்னணி போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றிகளைக் குவித்து பெரும் கவனத்தைப் பெற்றவர்.
சர்வதேச டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவானான ரோஜர் ஃபெடரர் சமீபத்தில் அனைத்து வகையான டென்னிஸ் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று ‘விம்பிள்டன்’ போட்டி நடைபெற்ற இடத்திற்கு ரோஜர் ஃபெடரர் குடும்பத்துடன் வருகை தந்திருந்தார். அதனைப் பாராட்டும் விதமாக பல்வேறு பதிவுகளைப் பதிவிட்ட விம்பிள்டன் நிர்வாகம்,
தன் முகநூல் பக்கத்தில், ‘தலைவா’ என தமிழ் வார்த்தையைக் குறிப்பிட்டு ரோஜரின் புகைப்படத்தை இணைத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை