யாழ். மட்டுவில் மண்ணில் வித்தியாசமான உலக சாதனை!!


1550 kg எடை கொண்ட ஊர்தியை தாடியால் இழுத்து 59 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவர் உலக சாதனையைப் படைத்துள்ளார்.  

குறித்த நபர் 400 மீற்றர் தூரத்தை 7 நிமிடம் 48 செக்கனில் இழுத்து இந்த உலக சாதனையைப் புரிந்துள்ளார். 

குறித்த  நிகழ்வு, யாழ்.மட்டுவில் ஐங்கரன் சனசமூக நிலைய முன்றலில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவன இலங்கைக்கான கிளைத் தலைவர் யோ.யூட்நிமலன் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது.

இதன்போது  சாதனையாளருக்கு அடையாளச் சான்றிதழும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.