உலக சாதனை படைத்த 3 வயது தமிழ் சிறுமி!
நுவரெலியா மாவட்டம் கொட்டகலையைச் சேர்ந்த 3 வயதான பவிஷ்ணா என்ற தமிழ் சிறுமி உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
உலக நாடுகளின் 40 தலைவர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த செந்தில்குமார் - ரேவதி தம்பதிகளின் மகளே இந்த சாதனையை படைத்துள்ளார்.
உலக சாதனை புத்தக நிறுவனமானது இந்த சிறுமியின் திறமையையும், அதீத நினைவாற்றலையும் பரிசீலனை செய்து உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்து சாதனைச் சிறுமியாக தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இதற்காக விண்ணப்பித்து ஏப்ரல் மாதம் சாதனை படைத்த சிறுமியாக அறிவித்து இவருக்கான இலச்சினை, பதக்கம், மற்றும் சான்றிதழ் என்பவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை