அச்சுறுத்தல்களால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இலட்சிய உறுதியைச் சிதறடிக்க முடியாது!
எங்களது தேசத்தின் மீது பாரிய இனப்படுகொலையை முன்னெடுத்த பின்னரும் எமது தேசம் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அடங்கவில்லை.
அடங்க மறுக்கும் இனத்தின் அடையாளமாக இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுந்து நிற்பதனை சகித்துக் கொள்ள முடியாத சிங்கள பௌத்த பேரினவாத வெறியர்கள் பேரலையாகத் திரண்டு அச்சுறுத்தி அடிபணிய வைக்க முயல்கின்றார்கள்.
எமது தேசத்தின் மீது சிறீலங்கா ஆயுதப்படைகள் புரிந்த இனப்படுகொலைக்கான சர்வதேச குற்றவியல் நீதி விசாரணைக்கோரிக்கையை கைவிடச் செய்யலாமென இனவாதிகள் கனவு காண்கிறார்கள்.
தமிழ்த் தேசத்தின் இறைமை சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஸ்டிக் கோரிக்கையை கைவிடச் செய்து ஒற்றையாட்சிக்குள் 13ற்குள் தமிழ் அரசியலை முடக்க ஒத்துழைக்கும் தமிழ்த் துரோகிகளது நிகழ்ச்சி நிரலுக்கு தடையாக இருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொள்கை உறுதிப்பாட்டினை சிதைக்க முடியுமென கனவு காண்கிறார்கள். அச்சுறுத்தல்களால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இலட்சிய உறுதியைச் சிதறடிக்க முடியாது
எமது தேசத்தில் சட்ட விரோதமாகக் கட்டியெழுப்பப்படும் சட்டவிரோத பௌத்த விகாரைக் கட்டுiமானங்களுக்கு எதிராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமையின் கீழ் தமிழினம் எழுச்சி கொண்டுவருவதனை தடுத்திட முடியுமென சிங்கள பௌத்த பேரினாவதம் கனவு காண்கின்றது.
ஆனால் சட்டவிரோத பௌத்த மயமாக்கலுக்கோ அல்லது திட்டமிட்ட பௌத்தமயமாக்கலுக்கோ நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
தந்தையைப் போலவே உறுதியுடன் இனத்தின் விடுதலைக்காக துணிந்து நின்று குரல் கொடுக்கும்
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்குப் பக்கபலமாக நாமிருப்போம்.
கருத்துகள் இல்லை