தினமும் பாடினால் போதுமே. முருகப்பெருமான் எந்த ரூபத்திலாவது உங்களுக்கு ஒரு நாள் காட்சி!


நல்ல நேரம், கெட்ட நேரம், ஜாதக கட்டம், தோஷங்கள், ராசி, அதிர்ஷ்டம் இவை எல்லாவற்றையும் ஒரு மூட்டை கட்டி ஓரமாக வைத்து விடுங்கள். நம்முடைய வாழ்க்கையில் வரும் அனைத்து கஷ்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் ஒரே வழி முருகப்பெருமானை தினம் தினம் வழிபாடு செய்வதுதான். மனதில் கெட்ட எண்ணமே எழக்கூடாது. அந்த முருகப்பெருமானை தவிர வேறு எந்த எண்ணமும் உங்கள் மனதிற்குள் வரக்கூடாதா தினமும் திருப்புகழில் இருந்து ஏதாவது ஒரு பாடலை பாடுங்கள். நீங்கள் திருப்புகழை பாடத்தொடங்கிய நாளிலிருந்து முருகப்பெருமானை உணரத் தொடங்கி விடுவீர்கள். இதில் இன்னொரு அதிசயம் என்ன தெரியுமா. நீங்கள்  தினமும் திருப்புகழில் இருக்கும் ஏதாவது ஒரு பாடலை பாட வேண்டும் என்று மனதார நினைத்து முருகப்பெருமானை வேண்டினாலே, உங்களுக்கு உண்டான பாடல் என்ன என்பதை அந்த முருகப்பெருமானே ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து உங்களுக்கு காண்பித்துக் கொடுப்பாராம். சரி, முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்கள் ஒவ்வொரு மனதிலும் இந்த ஆசை இருக்கும். உயிர் பிரிவதற்குள் என்றாவது ஒருநாள் அந்த முருகப்பெருமான் நம்முடைய கண்களுக்கு, கனவிலாவது காட்சி தர மாட்டாரா என்ற ஆசைதான். உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால், உண்மையான பக்தியோடு தினம் தினம் முருகப்பெருமானை நினைத்து, உங்கள் வீட்டில் பூஜை அறையில் இருக்கும் முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு முன்பு அமர்ந்து, இரண்டு நிமிடம் நேரத்தை செலவழித்து, அருணகிரி நாதர் அருளிய திருப்புகழில் இருக்கும் இந்த ஒரு பாடலை மனம் உருகி பாடுங்கள். நிச்சயமாக அந்த முருகப்பெருமான் ஏதாவது ஒரு ரூபத்தில் கனவிலாவது வந்து உங்களுக்கு காட்சி கொடுப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. எளிமையான தமிழ் வரிகளில் திருப்புகழில் இருந்து அந்த ஒரு பாடல் இதோ உங்களுக்காக.

 முருகனை காண திருப்புகழ் பாடல்: 

என்னால் பிறக்கவும் 
என்னால் இறக்கவும் 
என்னால் துதிக்கவும் 
கண்களாலே என்னால் அழைக்கவும். 
என்னால் நடக்கவும் 
என்னால் இருக்கவும் 
பெண்டிர்வீடு என்னால்
 சுகிக்கவும் என்னால் 
முசிக்கவும் என்னால்
 சலிக்கவும் தொந்தநோயை என்னால் 
எரிக்கவும் என்னால்
 நினைக்கவும் என்னால் 
தரிக்கவும் இங்கு நான்
 ஆர் கன்னார் உரித்த என் மன்னா 
எனக்குநல் கர்ணாமிர்தப்பதம் 
தந்தகோவே கல்லார் 
மனத்துடன் நில்லா 
மனத்தவ கண்ணாடியில்
 தடம் கண்டவேலா
 மன்னான தக்கனை முன்னாள்
 முடித்தலை வன்வாளியிற் கொளும்
 தங்கரூபன் மன்னா குறத்தியின்
 மன்னா வயற்பதி மன்னா 
முவர்க்கொரு தம்பிரானே! 

இதையும் படிக்கலாமே: மல்லிகை பூவை வைத்து இப்படி செய்தால் போதும். நஷ்டத்தில் இருக்கும் தொழில் கூட லாபகரமாக மாறும். வீட்டில் தங்கு தடை இன்றி பணம் வந்துகொண்டே இருக்கும். குழந்தைகளுக்கு சினிமா பாடல்களை எல்லாம் சொல்லிக் கொடுத்து பாடசொல்லி பழகுகின்றோம். ஆனால் பொக்கிஷமாக விளங்கும் இப்படிப்பட்ட இறையருள் நிறைந்த பாடல்களை எல்லாம் நாம் மறந்தே போய் விட்டோம். குடும்பத்தோடு பூஜை அறைக்கு முன்பாக அமர்ந்து தினமும் இந்த ஒரே ஒரு பாடலை முருகப்பெருமானை நினைத்து பாடி தான் பாருங்களேன். உங்களுக்குள் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.