வரலாற்றில் இன்று.
தமிழர் தேசத்தின் அரசியல் வேணவாவையும், இறைமையையும், தனித்துவத்தையும் பேணும் வகையில் வரலாற்றில் அதன் செல் நெறியாக - மறையாக - யாப்பாக விளங்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் - 1976, திம்புக் கோட்பாடுகள் - 1985 ,சுதுமலைப் பிரகடனம் - 1987, நந்திக்கடல் கோட்பாடுகள் - 2009 வரிசையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுதுமலைப் பிரகடணத்தைத் தலைவர் முன் வைத்த நாள் இன்று.
வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடுகள், சுதுமலைப் பிரகடனம், வழியாக நந்திக்கடல் கோட்பாடுகள் என்ற புள்ளியில் வந்து இணைந்த தமிழீழத்தின் அரசியல் செல் நெறி, மறை, யாப்பின் புதுப்பிக்கப்பட்ட நவீன தீர்மானத்தை உலகளாவிய அளவில் மீண்டும் கடந்த 2022 ம் ஆண்டு சிங்கள ஆட்சியாளர்கள் மக்களால் துரத்தப்பட்டு நாடு திவாலானதாக அறிவிக்கப்பட்ட போது பிரகடணப்படுத்தும் வாய்ப்பைத் தமிழர் தேசம் கோட்டை விட்டது.
வரலாற்றில் தமிழர் தேசக் கோட்பாட்டை முரசறிவிக்கும் ஐந்தாவது தீர்மானமாக அது இருந்திருக்கும்.
தொடர் ஆக்கிரமிப்பிற்குள்ளாகி இன அழிப்புக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் எமக்கு எமது அரசியல் வேணவாவை உலகறிவிக்கும் ஒரு அரிய வாய்ப்பாக 2022 அமைந்திருந்தது.
நாம் பல தளங்களில் தாயகம், புலம், தமிழக மட்டங்களில் கடுமையாக முயற்சித்தும் எம்மவர்கள் பலரின் தற்குறித் தனத்தினால் எமது முயற்சி பலனளிக்கவில்லை.
வரும் வாய்ப்பைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு ஒப்பாரி வைப்பதில் அர்த்தமில்லை.
இனியாவது விழிப்புடன் இருப்போம்.
தொடரும் சிறீலங்காவின் பொருண்மிய சிக்கல்களும், பிராந்திய முறுகல்களும், உக்ரைன் நெருக்கடியை அடுத்த புவிசார் அரசியல் போட்டிகளும் 2024 ஐ எமக்கானதாக மாற்றலாம் என்ற ஒரு கணிப்பு எம்மிடம் இருக்கிறது ( நந்திக்கடல் கணிதம்)
அதையாவது பயன்படுத்த இப்போதே தயாராவோம்.
வெல்வோம்
வென்றே தீருவோம்
கருத்துகள் இல்லை