பண மோசடியில் ஈடுபட்டவர் கைது!!
கனடா விசா பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் 05 பேரை ஏமாற்றி 26 இலட்சம் ரூபாவிற்கு மேல் மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னரும் கனடா விசாவினை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சம்பவம் ஒன்று பதிவாகியிருந்ததுடன் அந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரும் இவரே என பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை