மனிதர்கள் மீதான பார்வை!!

 


நாம் ஒருவருடன் பழகும் போது அவர்களிடம் எங்களை ஈர்க்கும் எதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது,  சில நல்ல செயல்கள், பழக்கவழக்கங்கள், சுபாவங்கள் , அவர்கள் நேர்மை, நகைசுவையுணர்வு , கருணை, துணிச்சல் , வெளிப்படையான பேச்சு  இப்படி எதோ ஒன்று காரணமாக இருந்திருக்கும் . சிலவேளைகளில் எதுவமே தெரியாமல் ஈர்க்கப் படுவதும் உண்டு. 


அப்படி ஈர்க்க படுபவர்கள் அநேகமாக எங்களை போல எங்களுக்கு விரும்பியது போல இருப்பதால் நாம் மிக இலகுவாக நட்பாகி விடுவோம், நம்பியும் விடுவோம் . நமக்கு மனதுக்கு உகந்தவர்களாக சிறந்தர்வர்களாக இருப்பார்கள். நாமும் மனம் விட்டு தாராளமாக பேசுவோம். அவர்களை நாங்கள் அந்நியமாக நினைக்க மாட்டோம்.


ஆனால் ஒருநாள் அந்த எங்களது நண்பர் /நண்பி என்று இருந்தவர்கள் நாம் நம்பி இருந்தவர்கள் ஒருநாள் நாங்கள் எதிர்பார்க்காத மாதிரி முற்றிலும் மாறுபட்ட விதமாக  ஒரு நாள் நடந்து கொண்டால் எங்கள் நம்பிக்கையை விட  நாம் அவர் இப்படிதான் என்று எண்ணி இருந்த அந்த இமேஜ் தான் முதலில் கலைந்து போகிறது. அதை எங்களால் ஜீரணிக்க முடிவதில்லை, அதற்கு காரணமே நாங்கள் தானே தவிர , அந்த நட்பு அல்ல. இவர் இப்படி இருப்பார் /இருப்பாள் என்று ஒரு உருவத்தை எமது மனதுள் உருவாக்கி வைத்தது நாம் தானே .அப்படி வைத்திருந்தது எமது தவறல்லவா, அப்படி ஒரு இமேஜ் ஏன் உருவாக்க வேண்டும். அதன் படி அது அமையவில்லை என்னும் போது அது தான் கலைந்து போகிறது.


எந்த ஒரு மனிதரை இப்படி அப்படி என்று வடிவமைத்து உறுதியாக இறுதியாக சொல்லி விட முடியாது , மனிதருக்கு பல முகங்கள் உண்டு அவை காட்டப்படுவதில்லையே தவிர அவை இல்லை என்று அர்த்தம் இல்லை. மனிதருக்கான எண்ணங்கள், எமோஷன் , கவலைகள், கனவுகள், கோபங்கள் , பழி உணர்ச்சிகள், கருணை , சவால்கள் இப்படி எண்ணற்ற உணர்வுகள் உள்ளே இருக்கும் அவை எல்லாம் எப்படி பழகினாலும் ஒரு ஆள் மனதில் இருப்பதை கண்டு விட முடியாது .எதோ கொஞ்சம் ஒருவரை பற்றி கொஞ்சம் மேலோட்டமாக தெரிந்து கொள்ளலாம் ,அதை வைத்துக்கொண்டு எங்களுக்கு எல்லாம் அவர்களை பற்றி தெரியும் என்று எண்ணி கொண்டால் அது யார் முட்டாள் தனம் . தெரியாத ஒரு பக்கம் அல்ல எக்கச்சக்கம் எல்லோருக்குள்ளும் உண்டு, சொல்ல படாத பக்கங்களும் நிறையவே உண்டு. வார்த்தை எவ்வளவு தான் வலு இருந்தாலும் எல்லா வார்த்தைகளுக்கும் அப்பால் பட்டு ஆழம் காண முடியாத அந்த மௌனம் ஆழமானது மிக கூர்மையானது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.