பாரதிராஜாவை பாட்டால் தேற்றிய வைரமுத்து!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, கவிஞர் வைரமுத்து பாட்டுப் பாடி ஊக்கமளிக்க முயற்சித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இயக்குநர் பாரதிராஜாவின் நடிப்பு சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் திருவின் குரல் ஆகிய படத்தில் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.
82 வயதாகும் பாரதிராஜாவு சமீப நாட்களாக அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவர்களின் உதவியை நாடி வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள அவரை அண்மையில் கவிஞர் வைரமுத்து சந்தித்ததுடன் அவரது பாடலால் தேற்றும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
“தென்மேற்கு சீமையிலே, தேடிநகர் ஓரத்துல, பால்பாண்டியாக வந்தார் பாரதிராஜா, பிறந்த இடமோ கள்ளிக்காடு, பிரியம் வளர்த்தான் கலையோடு, வறுமை கொடுத்த வலியோடு, வாழ்வே அவனின் வழிபாடு” என பாடி முடித்தார் கவிஞர் வைரமுத்து.
இந்தப் பாடலில் மெய்சிலிர்த்த பாரதிராஜா, “இந்த பாடல் எனக்கு மேலும் வலிமை சேர்க்கிறது” என பெருமைபட்டுக்கொண்டார். வைரமுத்து.அவர்கள், இந்தக் காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை