கனடா பிரதமர் மனைவியைப் பிரிகின்றாரா!!

 


கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  18 வருட திருமண வாழ்க்கையின் பின்னர் தனது மனைவியைப் பிரிவதாக  அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவி சோபியும் வெளியிட்டுள்ளனர்.

அர்த்தபூர்வமான கடினமான கருத்துப்பரிமாற்றங்களின் பின்னர் பிரிவதற்கு தீர்மானித்துள்ளோம் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

அவரது மனைவியும் இதேபோன்ற செய்தியை சமூக ஊடகங்களி;ல் வெளியிட்டுள்ளார். இருவரும் இது தொடர்பான சட்டபூர்வ ஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

2005 இல் திருமணபந்தத்தில் இணைந்த இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 2015 இல் ட்ரூடோ பிரதமரான பின்னர் அவரும் மனைவியும் பல நிகழ்வுகளில் காணப்பட்டனர் எனினும் சமீபகாலமாக இருவரையும் ஒன்றாக பொதுநிகழ்வுகளில் காணமுடியவில்லை என கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சோபி கணவருடன் காணப்படுவதை தவிர்த்துக்கொண்டதாக கனடா ஊடகங்கள் தெரிவிகின்றபோதும், மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்வில் இருவரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.