மட்டக்களப்பு வைத்தியசாலையில் இளம்தாய் மரணம்!!

 


மட்டடக்களப்பு போதனா வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம்தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயான மட்டக்களப்பு கிரான்குளத்தை சேர்ந்த 35 வயதுடைய சின்னத்தம்பி சுபாஜினி என்பவர் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர், அதாவது  14.08.2023 அன்று உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரது சிசுவும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஒவ்வொரு மாதமும் கிரமமாக  மருத்துவ கிளினிக்கிற்குச்  சென்று வந்த தாயினதும் சிசுவினதும் மரணத்திற்கான காரணம் என்ன என மக்களால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஒரு வாரம் வரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பபட்டிருந்த தாயைக் கவனிக்க நேரமில்லாது தனியார் வைத்தியசாலையில் பிசியானது தான் இந்த மரணத்திற்கான காரணமா? என  சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.